அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபின்னரே இஸ்லாமிய கல்வி மையங்களில் சீருடை: அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமிய கல்வி மையங்களில் பயிலுவோர் சீருடை அணிவதை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மோஷின் ராஜா, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இஸ்லாமிய கல்வி மையங்களை வளர்ப்பதே அரசின் நோக்கம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் நாடு முழுவதும் உள்ள மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு ஏன் சீருடையை கட்டாயமாக்கக்கூடாது என்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை குறிவைப்பது ஏன் என்றும் ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.