எம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரியின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடிப்பார் என தகவல்

எம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட்-டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் எம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி இருந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த இத்திரைப்படம் 2016ல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க RSVP Films என்ற தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளது. இதிலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டையே தோனி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர் தோனி புரிந்த சாதனைகள், சர்வதேச மற்றும் ஐ.பி.எல்.ல் 20 ஓவர் போட்டிகளில் பெற்ற வெற்றிகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.