கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் குமாரசாமி புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுத்ததற்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேரடி அனுமதி பெற்று, குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.