புது தில்லி: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாகக் கருதக்கூடாது எனக் கூறி வருகிறது சீனா.
தொடர்ந்து சீன தைபே என அதனைக் குறிப்பிடும் படி, அனைத்து நாட்டு விமான நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து, சீனா கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் அனுப்பியது.
சீனாவின் ஷாங்காய் நகருக்கு ஏர் இந்தியா ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. இந் நிலையில் ஏர் இந்தியாவும் தனது இணைய தளத்தில் தைவான் பெயரை சைனீஸ்தைபே என பெயர் மாற்றம் செய்துள்ளது.
இந்த மாற்றத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் தைவானை சீன தைபே என குறிப்பிட இந்தியா ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.