அமர்நாத் யாத்திரை செல்ல ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை, மலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் அமர்நாத் பனி குகைக்கு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பனி குகைக்கு செல்லும் பயணத்தில் இருப்பவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
பனிகுகைக்கும் செல்லும் வழியில் இருக்கும் வானிலை குறித்து யாத்திரை செல்பவர்களுக்கு எந்த தகவலும் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.