October 17, 2021, 10:31 pm
More

    ARTICLE - SECTIONS

    நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்

    19 July19 Congress MPs - 1நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாடாளுமன்றம் வளாகத்தில் விவசாயிகளுக்கு நீதி வழங்க கோரி காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் வெளியே திரண்ட காங்கிரசார் தங்கள் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்தும், விவசாயிகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி காந்தி சிலை அருகே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

    காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-