மக்களவையில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. தொடர்ந்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக ஆதரவு இருப்பதால் இத்தீர்மானத்தை அரசு எளிதில் தோல்வியடைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது