கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ததிலும், விமானத்தைப் பராமரித்ததிலும், ஹாட்லைன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்ததிலும் ஏறக்குறைய ஆயிரத்து 484 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், வெளிநாடுகளுக்கான விமானச் செலவு கடந்த 2014-15-ம் ஆண்டு 93.76 கோடி ரூபாய், 2015-16-ம் ஆண்டு 117 கோடி ரூபாயும், 2016-17-ம் ஆண்டு 76.27 கோடி ரூபாயும், 2017-18-ம் ஆண்டு 99.32 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.