ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இன்று தில்லியில் நடைபெற்ற மத்திய 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், வரும் 31ஆம் தேதிக்குள் 90% ஜிஎஸ்டி வரிவருவாயை வழங்குமாறு கோரினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்றை சென்னையில் அமைக்க வலியுறுத்தியதன் அடிப்படையில், அது சென்னையில் அமைக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.