மேகதாது அணையால் தமிழகம் பயனடையும் என்று கர்நாடக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழக விவசாயிகளின் சிரமத்தை அறிந்ததால் கபினி அணை நிறைவதற்கு முன்பே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாகவும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளதாக கூறிய அவர், அங்கு அணை கட்டப்பட்டால், காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கலாம் என்றார்.
புதிய அணையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் பயனடையும் என கூறிய குமாரசாமி, ஓரிரு நாட்களில் மேட்டூர் மற்றும் பவானி அணைகள் நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கும் என தெரிவித்தார்.