அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் வகையில் பணிகளை தொடங்குமாறு மகாராஷ்டிர பா.ஜ.க.வினரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணியின்றி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளார். 48 மக்களவைத் தொகுதிகளிலும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 25 பா.ஜ.க.வினரை பொறுப்பாளர்களாக நியமித்து பணிகளை முடுக்கிவிடுமபடியும் அமித்ஷா அறிவுறுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் சிவசேனாவுடன் இணைந்து பா.ஜ.க தேர்தலை சந்தித்தது