கேரளாவில், மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் ராமாயண பாராயணம் செய்து, அதன் வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் ஆடி மாதத்தை கேரளாவில், கொல்லம் ஆண்டு கார்கீடக மாதமாக கடைப்பிடிக்கின்றனர். இந்த மாதத்தில் ராமாயண பாராயணம் என்பது கேரளாவில் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தையே, ராமாயண மாதமாக கேரள மக்கள் அழைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் காயங்குளம் சட்டசபை தொகுதி பெண் எம்.எல்.ஏ.,வான பிரதீபா ஹரி என்பவர், சமீபத்தில் கேரள மாநிலத்திற்கே உரிய பாரம்பரிய உடை அணிந்து, எரியும் விளக்கின் முன் தரையில் அமர்ந்து, பக்தி சிரத்தையுடன் ராமாயணம் பாராயணம் செய்யும் வீடியோ பதிவு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பெண் எம்.எல்.ஏ.,வின் இந்த செயல் கேரள அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராமாயண பாராயணம் செய்த பெண் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை
Popular Categories