உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜராகினார்.
அவர் கூறுகையில், ”உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைச் சுற்றி பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்துள்ளோம் என்றும், தாஜ்மஹாலைச் சுற்றி இருக்கும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் கணக்கெடுத்து அவை அனைத்தும் மூடப்படும் என்றார். மேலும், தாஜ்மஹாலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில், கூடுதலாக சுற்றுலா வசதிகள் செய்யப்படும் என்றும் யமுனை ஆற்றங்கரை பகுதியில் சாலையும் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்றார்.