பிரதமர் மோடி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் உள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
மக்களவையில் கடந்த 20ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான ஒரு தொழிலதிபர் பயனடையும் வகையில் உள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். இந்த பேச்சு தொடர்பாக ராகுல் மீது பாஜ எம்பி.க்கள் 4 பேர் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தனர். அதை பரிசீலிப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.