இன்று இரவும் சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் முதல் சந்திர கிரகணம் முழுதாக 103 நிமிடங்கள் வரை நிகழும்.
இந்த நிகழ்வின் போது, ப்ளட் மூன் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது. அதாவது சூரியனுக்கும், நிலவிற்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும்.
இந்தியாவில் இந்த அதிசய நிகழ்வினை பார்ப்பதற்கான நேரம் எது?
நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வினை அம்புரா என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வு வரும் வெள்ளி இரவு, இந்திய நேரப்படி, சரியாக 11.44 நிமிடங்களுக்கு நிகழ ஆரம்பிக்கும்.
இந்தியாவில் எங்கிருந்து இந்த சந்திர கிரகண நிகழ்வினை காணலாம்?
இந்தியாவில் இந்த நிகழ்வினை டெல்லி, புனே, மும்பை, மற்றும் இதர நகரங்களிலும் காண இயலும். ஆனால், இது பருவமழை காலம் என்பதால் மழை பெருவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம். சனிக்கிழமை அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு பின்னர், மெதுவாக புவியின் நிழலில் இருந்து வெளிவர ஆரம்பிக்கும்.
இரண்டு சந்திர கிரகணங்கள்
இந்த நிகழ்வில் எக்கச்சக்க அதிசயங்கள் நிகழ உள்ளன. மிக நீளமான சந்திர கிரகணம், ப்ளட் மூன், தொடர்ச்சியாக இரண்டு சந்திர கிரகணங்கள் நடைபெற இருக்கிறது.
இரண்டாவது சந்திர கிரகணம் அதிகாலை 2.43 நிமிடங்களுக்கு ஆரம்பித்து 3.49 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.