இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாகவும், அதன்மூலம் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாதை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக அனுப்பிய பல நோட்டிஸ்களுக்கு அந்நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், எனவே சட்டவிரோதமாக இந்தியர்களின் தகவல்களை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்