புது தில்லி: கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
இன்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைச் செயலாளருடன் நடந்த பேச்சு வார்த்தையின்போது லாரி உரிமையாளர்களுடன் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப் பட்டுள்ளது. இதனால், மீண்டும் வழக்கம் போல் லாரிகள் இயங்கும் என்றும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.