ரஃபேல் விமானம்… இந்திய ராணுவத்தில் பறக்கத் தொடங்கும் முன்னர், அரசியல்வாதிகளின் வாய்களில் இருந்து பத்திரிகைகள் வரை இப்போது விட்டு விட்டு பறக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சுப்பிரமணியம் சுவாமி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறினார் என்று பிடிஐ., செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி இந்தியா டுடே அதை செய்தி உள்ளீடாகக் கருதிக் கொண்டு ஒரு செய்தி வெளியிடது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் சுப்பிரமணிய சுவாமி. தாம் இப்படி எங்குமே சொன்னதில்லை என்று கூறிய சுவாமி, இதற்காக பிடிஐ மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.
பிடிஐ., இதைக் கேட்டு அரண்டது. பிடிஐ., சோர்ஸ் என்று பெயரைச் சொல்லி செய்தி வெளியிட்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த அது, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியதும், தாங்கள் அப்படி சுப்பிரமணிய சுவாமி பெயரைக் குறிப்பிட்டு எந்த விதமான செய்தியையோ கட்டுரையையோ வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, பின்வாங்கியது.
செய்திகளுக்கு மூலப் புள்ளியாக, முக்கிய ஆதாரமாக பிடிஐ., செய்தி நிறுவனத்தைத் தான் பல செய்தி சேனல்களும், ஊடகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பிடிஐ.,க்கு ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது.
இதனிடையே, சுப்பிரமணியம் சுவாமி, தம் போக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே பத்திரிகைகளை சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார். வழக்கம் போல் விலைபோன ஊடகங்கள் எனக் குறிப்பிட்டு பெய்ட் மீடியா என விளாசுபவர், அதனை டாய்லட் பேப்பர் என நக்கல் அடித்துள்ளார்.
Some India Times is quoting me that I said today the Rafaela’s deal is “corrupt” and that I will go to court against it. Rubbish. It is totally fake news probably put out by paid India Times
— Subramanian Swamy (@Swamy39) July 29, 2018
India Times I learn is owned by Times of India group. So Toilet paper dirty trick. Twice in the past Toi let paper had to apologise. Now they need a rocket
— Subramanian Swamy (@Swamy39) July 29, 2018