October 23, 2021, 8:23 pm
More

    ARTICLE - SECTIONS

    காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி

    05 July30 Modi - 1பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறப்பட்டு உள்ள செய்தியில், பிரதமர் மோடி 2014–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டுகளில் இதுவரை 36 வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு உள்ளார். 155 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். இதற்காக ரூ.387.24 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2009–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை 31 வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் 131 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார். இதன் மூலம் ரூ.386.35 கோடி செலவிடப்பட்டது. மோடியை விட குறைந்த வெளிநாடு பயணம் மற்றும் குறைவான நாட்கள் மன்மோகன் சிங் தங்கி இருந்த போதும், ஏறக்குறைய அதே அளவிலான தொகை செலவிடப்பட்டு உள்ளது. எனவே மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    368FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,580FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-