பிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாறன் சகோதரா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து, மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.