என் கால்ல விழாத… ஓட்டு போட்ட மக்கள் கால்ல விழு… எம்.பி.க்கு மோடியின் அட்வைஸ்!

modi minister1

மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற உத்திரப் பிரதேச எம்பி., அசோக் டோக்ரேவை கண்டித்த பிரதமர் மோடி, உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் காலில் விழுங்கள், அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறி, கண்டித்தார்.

பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து வணங்க முயன்றார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. அசோக் டோக்ரே.

உடனே அவரைத் தடுத்து இப்படியெல்லாம் காலில் விழ வேண்டாம் என எம்.பி.க்கு அறிவுறுத்தி அவரை தோளில் தட்டிக் கொடுத்தார். மேலும், ஓட்டுப் போட்ட மக்களின் காலில் விழுந்து சேவை செய்யுங்கள் என்று கூறினார்.  இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.