ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ளது. வங்கிக்ளுகான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) பணவியல் கொள்கைக் குழு (MPC) 25 அடிநிலைப் புள்ளிகள் (பிபிஎஸ்) ரெப்போ ரேட் உயர்த்தி, 6.5 சதவிகிதம் என அறிவித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக இரண்டு தொடர்ச்சியான கொள்கைக் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி கடனளிப்புச் செலவுகளை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜூன் மாதத்தில் பணவீக்கம் 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டின் அடுத்த காலாண்டில், பணவீக்கம் 5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் முக்கிய காரணியாக, கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கான அரசின் முடிவை மேற்கோள் காட்டுகிறது ரிசர்வ் வங்கி.
கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்து வரும் கரீப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உணவுப் பணவீக்கம் மற்றும் பணவீக்கத்தின் மீதான இரண்டாவது சுற்று விளைவுகள் மீதான நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆர்.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பணவீக்கத்தின் நிச்சயமற்ற நிலை குறித்து வரும் மாதங்களில் கவனமாக கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2018-19 க்கு 7.4 சதவீதமாகவே ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது.