கௌஹாத்தி: தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி செய்யப்படு வெளியான பட்டியலில் அசாமில் உள்ள 40 லட்சம் பேர் இடம் பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றும், உள்நாட்டுப் போர் ஏற்படும் என்றும் கூறி நாட்டையே அதிர வைத்தார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான அசாமில் என்ஆர்சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 40 லட்சம் வங்கதேசத்தில் இருந்து குடி பெயர்ந்தவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது.
அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்நாட்டு போர் ஏற்படும், ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையிலும், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து மம்தா பானர்ஜி மீது அசாமின் லக்மிபூர், திப்ரூகர் மாவட்டம் நகார்காதியா போலீசார் தனித்தனியே இரு வழக்கு பதிவு செய்துள்ளனர்..