“மாமா நீ வேற மாதிரிடா.. அப்படியே போடு நல்லாருக்கு நல்லாருக்கு… அஸ்வின்”- என்று அஸ்வினிடம் சென்னைத் தமிழில் தினேஷ் கார்த்திக் பேசி உற்சாகப் படுத்தும் வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது @ashwinravi99 @DineshKarthik
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே 9 விக்கெட்களை இழந்து சுருண்டு முதல் இன்னிங்க்ஸில் 287 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.
நேற்றைய போட்டியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக்கும் அஸ்வினும் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஷ்வின் என மூன்று தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் பெங்களூருவை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கும் தமிழ் தெரியும்.
நேற்றைய போட்டியில் அஷ்வின் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் எதிர் கொண்டார். பந்து நன்றாக சுழன்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. இதையடுத்து, நீ வெற லெவல் மாமா.. அப்படியே போடு என தினேஷ் கார்த்திக் அஷ்வினிடம் தமிழில் சொல்லி உற்சாகப் படுத்த, அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதன் பிற்கு, நல்லாருக்கு அஸ்வின் நல்லாருக்கு அப்படியே போடு.. அடுத்த மூணையும் அப்படியே போடு.. இன்னா செய்றாங்கன்னு பாப்போம் என தினேஷ் கார்த்திக் கூறுகிறார். இப்படி, இங்கிலாந்து மைதானத்தில் தமிழக வீரர்கள் களத்தில் தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் செய்திகளுக்கும் லைவ் ஸ்கோர் பார்க்கவும் இணைந்திருங்கள்… தினசரி கிரிக்கெட்
அந்த வீடியோ…