கொச்சி: கொச்சி அருகே மீன்பிடிக்கச் சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
குமரியைச் சேர்ந்த மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்ற படகு கொச்சி அருகே செல்லும் போது அங்கிருந்த கப்பல் ஒன்று பலமாக மோதியது. இதில் படகு கவிழ்ந்து 15 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர் .
இந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 பேரை சக மீனவர்கள் கரை சேர்த்தனர். 10 மீனவர்கள் மாயமாகினர். மாயமான மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.