வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அடுத்த மக்களவை பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. பாரதீய ஜனதா – காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல் வெளியாகின. இது குறித்து அரியானாவின் ரோக்டாக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கையில், டெல்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது என்றும் மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராடிதான் பெறவேண்டியுள்ளது என்றும் கூறினார். வரும் 2019- மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும் எதிர்வரும் அரியானா சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.