கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி
– அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை மறக்க வைப்பீராக! – என்று கிண்டல் அடித்துள்ளார் ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி – அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை மறக்க வைப்பீராக!
— Dr S RAMADOSS (@drramadoss) August 14, 2018
பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில், மஹாராஷ்டிராவில் உள்ள புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சி 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் கவலையின்றி வாழ்க்கை நடத்துதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் திருச்சியே முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் பிடித்தன. ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழக நகரங்கள் முறையே திருச்சி 12; சென்னை 14; கோவை 25; ஈரோடு 26; மதுரை 28, திருப்பூர் 29 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகர் புதுதில்லி 65 ஆவது இடத்தை பிடித்தது. 111 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.