முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு ஸ்மிரிதி ஸ்தல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் வாகனத்துடன் நடந்து செல்கின்றனர். பாதுகாப்பு நடைமுறைகளை மீறி பிரதமர் மோடி நடந்து செல்வது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.. #AtalBihariVaajpayee