03/07/2020 10:04 PM
29 C
Chennai

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Must Read

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

செய்திகள் … சிந்தனைகள் … 03.07.2020

ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் முடிவிற்கு வந்துவிட்டது - லடாக் எல்லையில் பிரதமர் சீனாவை அடக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பைக்...

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

12 July30 Maran Brothers பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு:  கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடிதொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கலாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கலாநிதி மாறனின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.

இதேபோன்று தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உச்சநீதின்றம், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளுமாறு கடந்த 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு:  கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This