புது தில்லி : வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடனை சமாளிக்க இயலாமல் வங்கிகள் நெருக்கடியில் தவித்து வருகின்றன. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது வராக் கடன் விவகாரத்தை பெருமளவில் கண்டறிந்தது குறித்து மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பாஜக., தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து வராக்கடனை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்தது. இந்த விவகாரம் குறித்து ரகுராம் ராஜனுக்கு முரளி மனோகர் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். ரகுராம் ராஜன் தற்போது சிகாகோவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.