திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
அதிரடி அரசியலுக்கு பேர் போனவர் சு.சுவாமி. பாஜக.,வின் மத்திய தலைமை ஒன்று நினைத்தால், அதற்கு நேர் மாறாக தனது கருத்தை தெரிவித்து பாஜக.,வுக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பதில் வல்லவர். பல நேரங்களில் சுவாமி சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று விளக்கம் கொடுக்கும் நிலைக்க்கு தளுவார்.
இந்நிலையில் சுவாமி கூறியபோது, தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி தத்துவத்தை முன்னிறுத்தினால்தான் பாஜக வெற்றி பெற முடியும்
திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று அடித்துக் கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.