பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார். அவருக்கு வயது 95.
1923ல் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1975ம் வருட நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திரா காந்தியால் சிறையில் தள்ளப்பட்ட முதல் பத்திரிகையாளர் இவரே.
மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான குல்தீப் நய்யார் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
இந்திய பாகிஸ்தான் அமைதிப் பேச்சுகளில் அதிகம் ஆர்வம் காட்டியவர். இவர் எழுதிய பியாண்ட் த லைன்ஸ் என்ற புத்தகத்தில், பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்து காதர் கானின் பேட்டி இடம் பெற்றது. அதில், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக உலகுக்கு அறிவிக்கும் வெகு காலத்துக்கு முன்பே அணு ஆயுத தயாரிப்பில் இருந்த விஷயம் வெட்ட வெளிச்சமானது.
குல்தீப் நய்யாரின் மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இரங்கல் பதிவு…
Kuldip Nayar was an intellectual giant of our times. Frank and fearless in his views, his work spanned across many decades. His strong stand against the Emergency, public service and commitment to a better India will always be remembered. Saddened by his demise. My condolences.
— Narendra Modi (@narendramodi) August 23, 2018