ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.
முல்லை பெரியார் அணையை திடீரென திறந்ததே வெள்ளத்துக்கு காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
ஆக.15ல் முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, அணையிலிருந்து இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது; ஆனால் அன்று கேரளா அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
கேரள வெள்ளத்துக்கு தமிழகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ள தமிழக அரசு, ஆக.16-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது, ஆனால் கேரளா 4.47 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது என்று கூறியுள்ளது.