மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு, பெரிய விவாதப் பொருள் ஆகியுள்ளது. டிவிட்டர் வாசிகள் அவரது டிவிட்டை வைத்து, பெரும் சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது பதிவால் தாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பாஜக., அனுதாபிகளும், திமுக., ஐ.டி., பிரிவினரும் தெரிவித்து வருகின்றனர்.
சு.சுவாமியின் டிவிட்டர் பதிவும்… பதிலுரைகளும்…
Happy to learn that Party President Amit Shah has decided not to attend the DMK meet.
— Subramanian Swamy (@Swamy39) August 24, 2018