October 15, 2024, 8:08 AM
24.9 C
Chennai

மகளே ஸ்வப்னா… ஸ்வப்னங்களை நிஜமாக்கிய பெண்ணின் தாய்.. வெடித்த அழுகுரல்!

ஸ்வப்னா பர்மன்! ஜகார்த்தாவில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் Heptathlon பிரிவில் தங்கம் வென்றவர். Heptathlon, deemed as THE toughest Athletic event.

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரிக்ஷா தொழிலாளி. தாய் தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர்.2013 ஆம் ஆண்டு முதல் தந்தையார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார்.

இவருக்கு ஒவ்வொரு கால்களிலும் ஆறு விரல்கள் உண்டு. இவரது கால்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் கூட வாங்க வசதியற்றவர். நேற்றைய போட்டியின் போது தாடையில் வேறு காயம் ஏற்பட்டு பிளாஸ்திரி போட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றிருக்கிறார்.

சாதனை புரிந்த வைராக்கியம்! மகள் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் அவரது தாய்.