திரைப்படத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் அடித்ததில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
எந்த ஒரு செயலையும் செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்றத்தின் படியேறி தீர்ப்புக்கு நிற்கும் காலத்தில், இப்போது மலையாள திரையுலகின் வளரும் நட்சத்திரமாக ஒரே படத்தில் பெயரைத் தட்டிக் கொண்டு சென்ற பிரியா வாரியர், திரைப்படத்தில் கண்ணசைவு காட்டியது, கலாசார முரண் என்று கூறி, மனு கொடுக்கப் பட்டது.
இந்தப் படத்தை அனுமதிக்கக் கூடாது என்று கூறி பிரியா வாரியர் மீது தெலுங்கானா போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், தெலங்கானா போலீஸாரின் இந்த வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
கண் அடித்ததில் மத உணர்வு எத்வும் புண்படுத்தும்படி இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.
அந்த வகையில், மிகவும் ரசனையான வகையில், மலையாள படத்தில் பிரியா வாரியர் கண் அடித்தது செல்லும்! ரசனையில்லாதோர் மண்டையில் குட்டும் வகையில் ரசனையான தீர்ப்பை அளித்துள்ளது உச்ச நீதிமன்றம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதிக்கத் தொடங்கி விட்டனர்.