ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது. வோடபோன் – ஐடியா இணைப்பின் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம், அதிக வருவாய் சந்தை மதிப்பு கொண்டிருந்த நிறுவனம் போன்ற பெருமைகளை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது.
ரிலையன்ஸின் ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகவும் மோசமான நிலைக்கு ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தள்ளப்பட்டதால் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது என இரு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.
இரு பெரும் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இரு நெட்வொர்க்களின் சேவையும் தரமும் இனி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆரோகà¯à®•ியமான இநà¯à®¤ இணைபà¯à®ªà¯ மூலம௠தரமான போடà¯à®Ÿà®¿ வநà¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯, மகà¯à®•ளà¯à®•à¯à®•௠நிசà¯à®šà®¯à®®à¯ நணà¯à®®à¯ˆ பயகà¯à®•à¯à®®à¯.