மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர்.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி விழாக்கள் களை கட்டிய நிலையில், தாமும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், தமிழின் தொன்மையான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணன் பாடலை, ஆய்ச்சியர் குரவைப் பாடலை எடுத்து வெளியிட்டு, அதனைப் பாடிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பாடலையும் பதிவிட்டு தமிழர் நாகரிகத்தில் கண்ணன் போற்றப் பட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில்…
1. வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே! — ஆய்ச்சியர் குரவை, சிலப்பதிகாரம். https://t.co/03pZkgg2mJ— Nirmala Sitharaman (@nsitharaman) September 3, 2018