பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மகளிர் காவல் படை உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பெண்கள் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 2018 முதல் 2021ஆம் ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 8 நகரங்களிலும் அனைத்து மகளிர் போலீஸ் ரோந்து படை அமைக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்துவிதமான வசதிகள் உருவாக்கப்படும். 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் பெயரில் 2013ஆம் ஆண்டு மத்திய அரசால் நிர்பயா நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசு இந்த திட்டத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான இந்த திட்டத்துக்கு சென்னை நகருக்கு 425 கோடியே 6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.