பள்ளி மாணவியைக் கடத்தி பலாத்காரம்: இளைஞர்கள் இருவர் கைது

லக்னோ: 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் லோனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமியை கடந்த 9ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மயக்க மருந்து கலந்த பானத்தை அச்சிறுமிக்கு கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார், அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.