சமூக வலைத்தளங்களில் EPF குறித்து வலம் வரும் புகார்கள்

இபிஎஃப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான ஆண்டு வட்டி தற்போதுவரை உரியவர்கள் கணக்கில் செலுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஊழியர்களுக்கான தொழிலாளர் சேமநலநிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கான ஆண்டு வட்டி, நிதியாண்டு நிறைவான மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், நடப்பு ஆண்டு வட்டித் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.

சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆண்டுக் கணக்கு பதிவிடும் பணி நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் எனவும் இபிஎஃப் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.