தூய்மையான இந்தியா உருவாக்குவதே லட்சியம்: பிரபலங்களுடன் மோடி பேச்சு!

தூய்மையே சேவை - என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காணொளிக் காட்சியின் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் உரையாடினார்.

தூய்மையே சேவை – என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காணொளிக் காட்சியின் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் உரையாடினார்.

தூய்மையான இந்தியா – என்பதை முன்வைத்து, தூய்மையே சேவை என்ற திட்டம் இன்று தொடங்கப் பட்டது. பிரதமர் மோடி  நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இதற்காக காணொளிக் காட்சி மூலம் தொழிலதிபர் ரத்தன் டாடா, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

4 ஆண்டுகளுக்கு முன் காந்தி ஜெயந்தி நாளில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப் பட்டபோது தானும் ஒரு பிரஜையாக பங்கெடுத்துக் கொண்டதை அமிதாப் பச்சன் குறிப்பிட்டார்.

டாடா அறக்கட்டளை துடிப்புடன் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பதாகவும், இந்த ஆதரவு தொடரும் என்றும் ரத்தன் டாடா உறுதியளித்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கூடியிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலருடன் இந்த திட்டம் குறித்து கேட்டறிந்தார். சேலம் தலைவாசல் பொதுமக்களுடன் மோடி கலந்துரையாடினார். தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதே தூய்மையே சேவை திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்ட மோடி, தூய்மை இந்தியா திட்டம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறினார்.