மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பதித்த லோகோ மற்றும் இணைய தளத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா முன்னிலையில் இந்த லோகோ வெளியிடப்பட்டளது. அனைத்து ரயில்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மாநில பேருந்துகள், அரசு இணையதளங்கள், ஏர் இந்தியா விமானங்கள் , அரசு காலண்டர், டைரி ,விளம்பரங்கள் போன்றவற்றில் இந்த லோகோ பயன்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.