புதுச்சேரி குருமாபேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி குருமாபேட் பகுதியில் அதிக அளவில் பள்ளிகளும், கல்லூரிகளும் தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வடக்கு மாநில காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் குருமாபேட் பகுதியில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
விவசாய பண்னை எதிரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தட்டாஞ்சாவுடி பகுதியை சேர்ந்த முகபது ரபி (19), ஜீவானந்த புரம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (19), ஷண்முக நகர் பகுதியை சேர்ந்த ஜயனார் (19) மேலும் முத்தியார்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 660 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இருவாகனம் மற்றும் கைபேசி பறிமுதல் செய்தனர்.