கேரள கன்யாஸ்த்ரீயை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப் பட்ட வழக்கில், போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து 87 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டது.
பிஷப் பிராங்கோ முல்லக்கல், போலீஸாரின் விசாரணைக்குப் பின்னர் நேற்று கைது செய்யப் படுவதாக அறிவிக்கப் பட்டார். தொடர்ந்து அவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறப் பட்டதைத் தொடர்ந்து, கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
அதன் பின்னர் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுட்த்தப் பட்டார். நீதிமன்ற விசாரணையின்போது, பிஷப் பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப்பை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.