எரிபொருள் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை வெற்று அறிவிப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெட்ரோல்-டீசல் விவகாரத்தில் நாட்டு மக்களை மோடி அரசு தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாக தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபின்னரும், மேலும் விலை உயர்ந்து வருவது, மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு என்பது நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.