- Ads -
Home இந்தியா துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

சென்னை: துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது என்று கல்வியாளர்கள் தம்மிடம் தெரிவித்த கருத்தையே ஆளுநர் கூறியதாக, ஆளுநர் மாளிகை விளக்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்தது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியபோது, என்னைச் சந்தித்த கல்வியாளர்கள் மற்றும் சிலர் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் நியமனம் நடப்பதாக கவலை தெரிவித்தனர். இதனை என்னால் நம்ப முடியவில்லை. அதனை மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். அப்போது தொடங்கி 9 துணைவேந்தர்கள் தகுதி அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றே பேசினார். மேலும், ஊழல் அல்லது பணம் வாங்கியதாக எவர் மீதும் ஆளுநர் புகார் கூறவில்லை! கல்வியாளர்கள் அவரிடம் தெரிவித்த கருத்தை மட்டுமே ஆளுநர் தெரிவித்தார் என்பது அவரது பேச்சில் தெளிவாக உள்ளது.

2018க்கு முன்னர் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களுக்கு ஏற்பட்ட நிலையை மக்கள் பார்த்துள்ளனர். அது…

ALSO READ:  தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

1. துணைவேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

2. இரண்டு துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச ஒழப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் சோதனை மேற்கொண்டனர்.

3. நியமன முறைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஒரு துணைவேந்தரை சென்னை உயர் நீதிமன்றமே பதவி நீக்கம் செய்தது.

எனவே, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றி துணைவேந்தர்களை நியமிக்கும் வகையில், விதிகளை ஆளுநர் மாற்றியமைத்தார்.  2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!

1 COMMENT

  1. விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. கல்வியாளர்கள் கருத்தைத் தெரிவித்தார் எனில் அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அக்கருத்து உண்மை என்பதால்தானே, தானே நேர்முகத்தேர்வு எடுத்துத் துணை வேந்தர்களை நியமித்துள்ளார். அரசைக் குற்றம் சுமத்துவதாகக் கருதிப் பேசியிருந்திருக்கின்றார். ஆனால் உயர் கல்வி அமைச்சரின் மறுமொழிக்குப் பின்னர் நியமன அதிகாரி வேந்தராகிய ஆளுநர் என்பதால் பின்வாங்குகிறார் என்றுதான் மக்கள் எண்ணுவர்.
    இதற்கு முன்பு துணைவேந்தர் அமர்த்தத்தில் ஊழல் நிகழ்ந்தமைக்கு ஆளுநர் அலுவலகத்திலும் பங்கு உள்ளதாக ஆளுநரே தெரிவித்துள்ளதாகத்தான் மக்கள் கருதுகின்றனர். அவர் கூறியதைப் பொய் என்று யாரும் எண்ணவில்லை. அஃது உண்மைதான். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக ஆளுநர் மாளிகையில் இருந்த இ.ஆ.ப. அலுவலரிடமிருந்து உசாவலைத் தொடங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version