- Ads -
Home இந்தியா கண் எதிரே சுயஇன்பம் செய்தவரால் அதிர்ச்சி அடைந்த நடிகை! #MeTooவில் கொட்டித் தீர்க்கிறார்கள்!

கண் எதிரே சுயஇன்பம் செய்தவரால் அதிர்ச்சி அடைந்த நடிகை! #MeTooவில் கொட்டித் தீர்க்கிறார்கள்!

பாலிவுட்டிலும் #மீடூ புயல் வீசிவருகிறது. இதற்கு நானா படேகர், அலோக் நாத், ரஜத் கபூர், விகாஸ் பாஹ்ல் மற்றும் பலர் இலக்காகி வருகின்றனர். அலோக் நாத் குறித்து பாலிவுட் நடிகை ரேணுகா சஹானே பகிரங்கமாகவே பலவற்றைக் குறிப்பிட்டு வருகிறார். மேலும் தன் டிவிட்டர் பதிவுகளிலும் தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ரேணுகா சஹானே தாம் ஒரு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றபோது, அங்கே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் நடந்த அந்தாக்சரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே ஜீ நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனத்தை திறந்து வைத்தனர். அதற்கான நிகழ்ச்சியை அங்கே வைத்து படம்பிடிக்கச் சென்றோம்.

நான் படப்பிடிப்புக்காக அவ்வப்போது வெளியூர் செல்வதால் தனியாக ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதே என் பழக்கம்.

ALSO READ:  ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

அந்த வகையில், அன்று நான் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த போது, அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு உணவு எடுத்துக் கொண்டு என் அறைக்குள் வந்தார். உணவைக் கொடுத்துவிட்டு நின்றவர், பின்னர் என்னை புகழ்ந்து பேசத் தொடங்கினார். மேடம் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று கூறி பேசிக் கொண்டிருந்தார். பின் அந்த நபர் திடீரென்று என் கண் எதிரிலேயே சுயஇன்பம் அனுபவிக்கத் தொடங்கினார்.

அந்த நபரின் இந்தச் செயலால் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். உடனே அந்த நபரை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினேன். உங்கள் இந்தச் செயல் குறித்து ஹோட்டல் மேனேஜரிடம் புகார் அளிப்பேன் என்றேன்.

பிறகு என் உதவியாளரை அழைத்து என்னுடன் உதவிக்கு இருக்க வைத்தேன். அந்தச் சம்பவத்தால் நான் மிகவும் பயந்தே போனேன். அதன் பின்னர், இனி நான் ஹோட்டல் அறையில் தனியாகத் தங்குவது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய காலச் சூழலில், சமூக வலைத்தளத்தின் மூலம் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து பலரும் வெளிப்படையாகத் தெரிவித்தும் பேசியும் வருகின்றனர்.

ALSO READ:  குருஜி சிந்தனைகள்: கல்வி - வேர்களை வலுப்படுத்துவோம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version