நடிகர் நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மும்பையின் ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு தனுஸ்ரீ தத்தா எழுதியுள்ள கடிதத்தில், நடிகர் நானா படேகரிடம் உண்மை கண்டறிதல், அரை மயக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் நார்கோ அனாலிஸிஸ், பிரைன் மேப்பிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நானா படேகர் மட்டுமல்லாது, நடன அமைப்பாளார் கணேஷ் ஆசார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், ஹார்ன் ஓகே பிளீஸ் பட இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோரிடமும் இத்தகைய உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.