பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ள அலகாபாத்தைத் தொடர்ந்து ஷிம்லாவின் பெயரும் மாறுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ‘அலகாபாத்’ நகரின் பெயர் ‘பிரயாக் ராஜ்’ என மாற்றப்பட்டது. அங்கே பிரயாகை என்பது புராதனப் பெயர் என்பதும், ருத்ர ப்ரயக், கர்ண ப்ரயாக் என பிரயாகையின் பெயரில் அடுத்தடுத்து புனிதத் தலங்கள் இருப்பதால், பிரயாகையின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ‘ஷிம்லா’வின் பெயரை, ‘ஷ்யாமலா’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஹிமாச்சல பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நகரின் பெயரை மாற்ற வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியதை அடுத்து பாஜக.,வைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.